ஃபைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல்

ஃபைசர் தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல்

மாதிரிப் படம்

ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு கொண்டுவர ஆதரவாக நிபுணர் குழு உறுப்பினர்களில் 17 பேரும், எதிராக 4 பேரும் வாக்களித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, ஃபைசர் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த மருந்தை கர்ப்பிணிகள் பயன்படுத்தலாமா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

  கனடா,பிரிட்டன், பஹ்ரைன் நாடுகளை தொடர்ந்து ஃபைசர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த நாடுகளின் பட்டியலில் நான்காவது நாடாக அமெரிக்கா இடம்பெற்றுள்ளது. இதில் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த இந்தத் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடு பிரிட்டன்.

  மேலும் படிக்க.,..அமெரிக்காவில் 3 லட்சத்தை நெருங்கும் கொரோனா உயிரிழப்பு

  கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கப்பட்டாலும் கோவிட்-19 நோய் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், முகக்கவசம் அணிதல், அறிகுறிகள் உள்ளவர்களை மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட விதிகளைக் கடைபிடிப்பது அவசியம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: