கொரோனா விவகாரத்தில் சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் - சரணடைந்த ட்ரம்ப்

முன்னதாக, கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்திவந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

கொரோனா விவகாரத்தில் சீனாவுடன் இணைந்து செயல்படுவோம் - சரணடைந்த ட்ரம்ப்
ட்ரம்ப், ஜீ ஜின்பிங்
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பு விவகாரத்தில் சீனாவுடன் இணைந்து செயல்படவுள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா பரவல் தற்போது உலகையே புரட்டிப் போட்டுள்ளது. உலகிலுள்ள 190 நாடுகளுக்கும் மேல் கொரோனாவால் பாதித்துள்ளன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சீனாவில் மிக அதிகமாக இருந்தது. சீனாவில் இன்று வரை 81,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை முந்தியுள்ளது.

அமெரிக்காவில் 85,000 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். முன்னதாக, கொரோனா வைரஸை சீன வைரஸ் என்று சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்திவந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்தநிலையில், இன்று காலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் ட்ரம்ப் போன் மூலம் பேசினார். அதன்பிறகு ட்ரம்பின் ட்விட்டர் பதிவில், ‘சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் நல்லதொரு பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்தது. நம்முடைய கிரகத்தின் பெரும் பகுதியை அழித்துவரும் கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்தோம். கொரோனா வைரஸ் குறித்து சீனா தீவிர புரிதலைக் கொண்டுள்ளது. நாங்கள் அவருடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Also see:
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading