அமெரிக்காவில் இன்று கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதனை! 45 இளைஞர்களுக்கு செலுத்தப்படுகிறது

"தடுப்பு மருந்தையும் முழுமையாக சோதித்து அறிய 12 முதல் 18 மாதங்கள் பிடிக்கலாம் என்று அமெரிக்கா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்"

அமெரிக்காவில் இன்று கொரோனாவுக்கு தடுப்பு மருந்து பரிசோதனை! 45 இளைஞர்களுக்கு செலுத்தப்படுகிறது
கோப்புப்படம்
  • Share this:
கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை இன்று அமெரிக்கா சோதனை செய்கிறது.

சீனாவில் உருவாகி பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. உலக அளவில் இன்றுவரை கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6000-ஐ தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில், சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி மையத்தில் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை பரிசோதனை செய்யும் பணி இன்று நடைபெறுகிறது.


45 இளைஞர்களுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தி அதன் மூலம் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதனை கண்காணிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பு மருந்து சோதனை இன்று நடைபெற்றாலும் எந்த ஒரு தடுப்பு மருந்தையும் முழுமையாக சோதித்து அறிய 12 முதல் 18 மாதங்கள் பிடிக்கலாம் என்று அமெரிக்கா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...

கொரோனா முன்னெச்சரிக்கை - சென்னையில் முழு வீச்சில் நடக்கும் சுத்தம் செய்யும் பணிகள்

கொரோனா அப்டேட்: Google அறிவுறுத்தும் ஐந்து செயல்கள்..!
First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading