ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம் - திருப்பூரில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

22 வயதான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஆம்புலன்ஸ் உதவியாளர் மரணம் - திருப்பூரில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு
உயிரிழந்த இளைஞர்
  • News18
  • Last Updated: June 24, 2020, 9:48 AM IST
  • Share this:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி அவிநாசிபாளையம் 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக (டெக்னிஷியனாக) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவரை கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டார்.





படிக்கசிக்கிமில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் இடையே கைகலப்பு - வைரலாக பரவும் வீடியோ

படிக்கசென்னையில் அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்






தொடர்ந்து ஒரு வார காலமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading