முகப்பு /செய்தி /கொரோனா / #News18Special | 'நாங்களே பயந்தா யார் இந்த வேலைய செய்யுறது...' ஆம்புலன்ஸ் மனிதர்களோடு ஒரு பயணம்

#News18Special | 'நாங்களே பயந்தா யார் இந்த வேலைய செய்யுறது...' ஆம்புலன்ஸ் மனிதர்களோடு ஒரு பயணம்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்

நாங்களே பயந்தா யார் இந்த வேலைய செய்யுறது என்கின்றனர் கொரோனா பணியில் உள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்.

  • Last Updated :

ஊரடங்கு காலத்தில் இன்னமும் சாலைகளில் அதிகம் ஓடிக் கொண்டிருப்பவை ஆம்புலன்ஸ் வாகனங்கள்தாம். இதில் பணிபுரியும் ஊழியர்கள் இன்னமும் வெளிச்சத்திற்கு வராமல், விளம்பரம் இல்லாமல் தங்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய முதல் நாள் தொடங்கி  இன்று வரையிலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்களின் மகத்தான மருத்துவப்பணி வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை.

ஏதோ ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டால் ஒட்டுமொத்த தெருவும் பூட்டி வைக்கப்படுகிறது. அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப் படுகிறார்கள். நோயாளிகளைப் பார்த்தால் அவர்கள் வீட்டைப் பார்த்தால் ஓடி ஒளிந்த மக்கள் உண்டு. ஏன், இறந்து போன மருத்துவர் சைமனின் உடலைக் கூட புதைப்பதற்கு இடம் கொடுப்பதற்கு கூட பயத்தால் மனமின்றி பெரும் போராட்டம் நடந்தது.

இத்தகைய சூழலில் ஒவ்வொரு நோயாளியையும் முதலில் சென்று சந்தித்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவது ஆம்புலன்ஸ் ஊழியர்கள்தான். அதிலும் குறிப்பாக நடக்க முடியாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என்றால் அவர்களை தொட்டுத் தூக்கி பத்திரமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல.

எல்லோருக்கும் இருக்கும் அதே பயம் இவர்களுக்கும் இருந்தாலும் அதைத் தாண்டி தங்கள் கடமையை செய்வதில் எந்த நேரத்திலும் தவறியதே இல்லை. கொரோனா பணியில் இருக்கும் மருத்துவர்களையும், காவல்துறையையும் பாராட்டும் மக்கள் எங்களை மட்டும் கண்டுகொள்வதில்லை. எங்களுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தால் இன்னும் உற்சாகத்தோடு  பணியாற்றுவோம் என்கிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேஷ்.

நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்யும் இவர்கள் பாதுகாப்பு உடை, க்ளவுஸ், மாஸ்க் எல்லாவற்றையும் பொருத்திக்கொண்டு வேலை செய்வதால் வியர்வையில் தொப்பலாக நனைந்து விடுவதாகவும் சில நேரங்களில் தோல் முழுக்க அலர்ஜி வருவதாகவும் கூறுகின்றனர்.

Also read... மதுரையில் அவசர சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு - 120 மருத்துவமனைகள் குறித்து ஐ.எம்.ஏ.,வில் புகார்

வேலையே வேண்டாம் ஊருக்கு வந்து விடு என்று பெற்றோர்கள் உறவினர்கள் சொன்னாலும் நாமே பயந்தால் எப்படி? அப்புறம் யார் இந்த வேலைய யார் செய்வாங்க என்று கேள்வி கேட்கிறார் ராஜேஷ்.

ஆரம்ப காலகட்டத்தில் கொரோனா நோயாளிகளை அழைத்து வருவதற்கு பயமாக இருந்தது. ஆனால், இப்போது பயம் எதுவும் இல்லை இது எங்கள் கடமை என்கிறார் ஆம்புலன்ஸ் ஊழியர் காந்திமதி.

இந்த பணி மிகுந்த மனநிறைவை தருவதாகவும்,தொடக்கத்தில் தங்களைப் பார்த்து பயந்து ஒதுங்கிய மக்கள் இப்போது கடவுளைப்போன்று பார்ப்பதாகவும் கூறுகிறார் டிரைவர் கனகராஜ்.


படிக்க: வேண்டாம் N-95 முகக் கவசங்கள் - மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை

படிக்க: கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு நாள் குறித்த ரஷியா

படிக்க: த்ரிஷாவுடன் திருமணமா? நடிகர் சிம்பு தரப்பு விளக்கம்


கூடுதல் ஊதியம் எதுவும் இல்லாமல் அதே சம்பளத்தில் 12 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ நோயாளிகளை தொட்டுத் தூக்கிக் கொண்டு வரும் இவர்களை கைத்தூக்கி விட வேண்டியது அரசின் கடமை.

இன்னும் கொஞ்சம் அங்கீகாரம் தேவை என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு, இவர்கள் இல்லையேல் ஏற்படும் பெரும் இழப்பு. உயிரை பணயம் வைக்கும் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கொஞ்சம் வரவேற்பும், வாழ்த்தும் சொன்னால்  இன்னும் வேகமாய் தொடரும் இவர்கள் பயணம்.

First published:

Tags: Ambulance, CoronaVirus