மனைவி, மகனுக்கு கொரோனா.. அரசு மருத்துவமனையில் சேர்த்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறறு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் 4 அமைச்சர் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகள் பலருக்கும் தினமும் தொற்று உறுதியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அவரிடமே விளக்கம் கேட்டது நியூஸ் 18.

அதற்கு பதிலளித்த அவர்,"தன்னுடைய மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு கிங்ஸ் (அரசு) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும்,அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இல்லை" எனவும் தெரிவித்தார்.


படிக்க: கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய அமைச்சர்கள்

மேலும்,"நான் வெளிப்படையான நபர், இதில் மறைக்க எதுவும் இல்லை. எனக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் வதந்தி. நான் நலமாக உள்ளேன்" என்றும் அவர் விளக்கமளித்தார்.
Published by:Vaijayanthi S
First published: