தடுப்பூசி பக்க விளைவுகளால் ஏற்படும் அலர்ஜி மற்றும் கொரோனா அறிகுறி.. வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது!

தடுப்பூசி பக்க விளைவுகளால் ஏற்படும் அலர்ஜி மற்றும் கொரோனா அறிகுறி.. வித்தியாசத்தை எப்படி கண்டுபிடிப்பது!

கோப்புப் படம்

தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட சிலர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

  • Share this:
ஒரு வருடத்திற்கும் மேலாகியும், கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரஸின் பல புதிய பிறழ்வுகள் தற்போது அதிகம் பரவுவதால் அவை தடுப்பூசி இயக்கங்களுக்கும் இடையூறு விளைவிக்கின்றன. ஏனெனில், தடுப்பூசியின் ஒரு டோஸ் அல்லது இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொண்ட சிலர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் சிலருக்கு, தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஒத்ததாக இருக்கின்றன. இதனால் பலர் தங்களுக்கு வந்துள்ள அறிகுறிகள் கொரோனா பாதிப்பால் ஏற்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்று குழப்பமடைகின்றனர்.

அறிகுறிகளை எவ்வாறு வேறுபடுத்துவது?

ஒவ்வாமையால் ஏற்படும் அறிகுறி மற்றும் கொரோனா பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள் ஆகிய இரண்டிற்கான வித்தியாசத்தை கண்டறிவது சற்று தந்திரமானதாக இருக்கும். குறிப்பாக இரண்டும் ஒரே நேரத்தில் பரவலாக இருந்தால் அது மிகவும் கடினம். ஆனால் இந்த வேறுபாட்டை கண்டறிவது முக்கியமாக குழந்தைகளுக்கு உதவும். ஏனெனில் பொதுவாக குழந்தைகள் ஒவ்வாமைக்கு ஆளாகும்போது, முன்பை விட இரண்டாவது அலையின் போது அவை குழந்தைகளில் கொரோனா அறிகுறிகளாக மாறி நோய்த்தொற்றுக்கு வழிவகுத்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒரு ஒவ்வாமை தொற்று மற்றும் COVID தொற்று ஆகிய இரண்டும் முதன்மையாக உங்கள் மேல் சுவாசக் குழாயில் இருமல், வாசனை இழப்பு, குளிர், ரன்னி கண்கள், தடிப்புகள், தலைவலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மூச்சுத் திணறல், படபடப்பு மற்றும் சுவாசக் கஷ்டங்கள் கூட சில சமயங்களில் ஏற்படலாம். ஆனால் இவை அரிதாகவே நடக்கின்றன. இருப்பினும், ஒவ்வாமை மற்றும் COVID அறிகுறிகளுக்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக இந்த அறிகுறிகளை வேறுபடுத்துவதற்கான திறவுகோல் அரிப்பு மற்றும் காய்ச்சல் ஆகியவை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தோல், மூக்கு, கண்கள் மற்றும் தொண்டையில் நமைச்சல் ஆகியவை வீக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். மேலும் இவை பொதுவாக ஒவ்வாமை ஏற்படும் போதும் காணப்படுகிறது. ஆனால், அரிப்பு கொரோனா பாதிப்பின் அறிகுறியாக இதுவரை கருதப்படவில்லை. அதேபோல காய்ச்சல் ஒவ்வாமைக்கான அறிகுறி அல்ல. ஆனால் கொரோனா பாதிப்பில் இது முக்கியமான அறிகுறியாகும். அதிக உடல் வெப்பநிலையைப் பதிவுசெய்யும் நபர்கள், மற்ற அறிகுறிகளுடன் COVID அல்லது பிற நோய்களால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வாமை பொதுவாக கொரோனா அறிகுறிகளில் காணப்படாத அல்லது தொடர்புபடுத்த முடியாத பல அறிகுறிகளை ஏற்படுத்தும். அவை மூக்கு ஒழுகுதல், நாசி சொட்டு கண்களில் இருந்து நீர் வெளியேறுவது ஆகியவை ஆகும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அவை கட்டாயமாக கொரோனா வைரஸால் ஏற்படுபவையாக இருக்காது. அதேபோல கொரோனாவால் ஏற்படும் ஒரு அறிகுறி சோர்வு. ஆனால் ஒவ்வாமை ஒரு நபரை சோர்வடையச் செய்வதோ அல்லது சோர்வுக்கு ஆளாக்குவதோ அரிதாகவே நடக்கும். இந்த அறிகுறி இருந்தால் அவை கொரோனா பாதிப்பாக இருக்கலாம்.

தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகள் என்ன?

தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகளாக வீக்கம் கருதப்படுகின்றன. தடுப்பூசிகள் தொற்று கிருமியைப் பிரதிபலிக்கின்றன மற்றும் அதற்கு ஒத்த அளவிலான அறிகுறிகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அதாவது தடுப்பூசிகளுடன் ஏற்படும் சில அழற்சி எதிர்விளைவுகளும் நோய்த்தொற்றுக்கு ஒத்ததாக இருக்கலாம். ஏனெனில் பெரும்பாலும் காய்ச்சல், தடிப்புகள், சோர்வு, தலைவலி ஆகிய கொரோனா அறிகுறிகள் அனைத்தும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கு பிறகு ஏற்படும் பக்கவிளைவுகளில் பொதுவானவை என்று கூறப்படுகிறது.

வித்தியாசத்தை நீங்கள் எவ்வாறு கண்டறிவது?

தடுப்பூசியின் முழுமையான டோஸ்களை பெறாவிட்டால், ஒரு நபர் கொரோனவால் பாதிக்கப்படுவார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் இரண்டாவது ஷாட் முடிந்த 14 நாட்களுக்குப் பிறகு தான் நீங்கள் முழுமையாக நோய்த்தடுப்புக்குரியவராகக் கருதப்படுவீர்கள். எனவே ஒருவர் தடுப்பூசியின் முதல் டோஸுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது. தடுப்பூசிக்கு பிந்தைய பக்க விளைவுகளை பொறுத்தவரை, இப்போது பொதுவாகப் புகாரளிக்கப்படுபவை காய்ச்சல், முதுகுவலி, உடல் வலி, சோர்வு, உடல்நலக்குறைவு, சோம்பல், ஊசி போடும் இடத்தில் வலி, தடிப்புகள் அல்லது வீக்கம் ஆகியவை அடங்கும்.

ஒரு COVID-19 நோய்த்தொற்று இந்த அறிகுறிகளை நிறைய ஏற்படுத்தக்கூடும். ஊசி போட்ட இடத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகியவை கிளாசிக் தடுப்பூசி பக்க விளைவுகளாகும். ஆனால் தடிப்புகள் மற்றும் வீக்கம் பரவலாகக் கொரோனா நோயாளிகளில் காணப்படுவதில்லை. அதேபோல, தடுப்பூசி பக்கவிளைவுகளில், இருமல், தொண்டை வலி, சிதைந்த மற்றும் பலவீனமான வாசனை திறன் அல்லது சுவை / சுவாச சிரமம், மார்பு வலி அல்லது இரைப்பை குடல் அறிகுறிகள் போன்ற அறிகுறிகளை கொண்டிருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒருவேளை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு உங்களுக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் நீங்கள் காட்டாயம் மருத்துவரை அணுகுவது அவசியம்.

 
Published by:Vijay R
First published: