Home /News /coronavirus-latest-news /

சிறப்பு ரயிலில் வந்த அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் - சென்னை மாநகராட்சி

சிறப்பு ரயிலில் வந்த அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர் - சென்னை மாநகராட்சி

மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம் தங்குவதற்கு பணம் செலுத்திய பயணிகளுக்கு தனியார் விடுதியில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை வந்த பயணிகள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் விதமாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் இருந்து கடந்த 14ம் தேதி வந்த சிறப்பு ரயிலில் 797 பேர் சென்னை வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், கடந்த 16 தேதி டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் 757 பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள் மூலம் தங்குவதற்கு பணம் செலுத்திய பயணிகளுக்கு மாநகராட்சி சார்பாக தனியார் விடுதியில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலவசமாக தங்க விரும்பிய 629 பயணிகள் அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Also see...

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி