இரண்டு முகக் கவசங்கள்: கார் இருக்கைகளுக்கு நடுவே பிளாஸ்டிக் கவர் - அமைச்சர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்

இரண்டு முகக் கவசங்கள்: கார் இருக்கைகளுக்கு நடுவே பிளாஸ்டிக் கவர் - அமைச்சர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா
  • Share this:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு உள்ளிட்ட 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர்களுக்கு கொரோனா குறித்த அச்சம் அதிகளவில் எழுந்துள்ளது.

இதனால் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும் அமைச்சர்களில் சிலர் அதிக கவனம் எடுத்துக் கொள்கிறார்கள். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இரண்டு முககவசம் அணிந்திருந்தார். அதிக பாதுகாப்பு கொண்ட என் 95 மாஸ்க் மேல் புறத்திலும் அதற்கு அடியில் மற்றொரு முககவசமும் அணிந்து வந்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்அதே போன்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தனது காரில் ஒருவருடைய மூச்சுக்காற்று மற்றவருக்கு படாத வகையில் அதிக தரம் கொண்ட பிளாஸ்டிக் கவர்களை பொருத்தி உள்ளார். 4 பேர் காரில் அமரும்போது நான்கு சுவர் எழுப்பியதைப் போன்று பிளாஸ்டிக் கவர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ காற்றில் பரவாத வகையில் தனது காரில் இதை வடிவமைத்து உள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நாள்தோறும் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் இந்த முறையை பின்பற்றி வருவதாகக் கூறுகிறார்.

மேலும் படிக்க: நாளைமுதல் தமிழக கல்வித்துறையில் செயல்பட இருக்கும் 3  திட்டங்கள் எவை? முழு விவரம் இதோ...இதை போன்று அமைச்சர்கள் பலரும் அடிக்கடி சானிடைசர் கொண்டு கையை துடைப்பதையும் அடிக்கடி முககவசத்தை மாற்றுவதையும் பார்க்க முடிந்தது.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading