வருமான வரி பிடித்தத்தை விரைவில் திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு...!

அனைத்து ஜிஎஸ்டி, சுங்க வரி பிடித்தமும் திருப்பி தரவும் உத்தரவு.

வருமான வரி பிடித்தத்தை விரைவில் திருப்பி அளிக்க நிதியமைச்சகம் உத்தரவு...!
வருமான வரி
  • Share this:
5 லட்சத்துக்கும் குறைவான வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழ்நிலையில், வரி செலுத்துவோருக்கு உடனடி நிவாரணம் வழங்க, நிலுவையில் உள்ள ரூ .5 லட்சம் வரையிலான அனைத்து வருமான வரி பிடித்தத்தை திருப்பி அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 14 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

இதே போன்று, சிறு, குறு தொழில் நடத்துவோர் உட்பட தொழில் புரியும் சுமார் 1 லட்சம் பேர் பயனடையும் வகையில் அனைத்து ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரி பிடித்தமும் உடனாடியாக வழங்கப்படும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.


இவர்களுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ரீபண்ட் கிடைக்கும். கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சத்து 70 லட்சம் கோடி சலுகைத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 26-ஆம் தேதி அறிவித்திருந்தார்.

Also see...










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading