கேரளாவில் அனைத்து கட்சி தலைவர்களுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை..
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பினராயி விஜயன்
- News18 Tamil
- Last Updated: September 29, 2020, 7:54 AM IST
கேரளாவில் தொடக்கத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். எனினும், கொரோனா விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க...வேளாண் சட்டங்கள்: தமிழக அரசு செல்லவில்லையெனில் திமுக நீதிமன்றம் செல்லும் - மு.க.ஸ்டாலின்
மாநிலத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளுடன் காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இதில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.