14 நாட்கள் நோய்த்தொற்று பரவாமல் இருந்தால் அபாயகரமான பகுதி என்ற எச்சரிக்கை நீக்கப்படும் - சென்னை மாநகராட்சி

முன்பு 28 நாட்களில் தொற்று ஏற்படாவிட்டால் மட்டுமே  விடுவிக்கப்படும் எனும் நிலை இருந்தது.

14 நாட்கள் நோய்த்தொற்று பரவாமல் இருந்தால் அபாயகரமான பகுதி என்ற எச்சரிக்கை நீக்கப்படும் - சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி அலுவலகம். (கோப்புப்படம்)
  • Share this:
சென்னையில் கொரோனா எச்சரிக்கைப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் 14 நாட்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாத பகுதி விடுவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. 

இன்று சென்னையில் 46 இடங்களுக்கு எச்சரிக்கைப் பகுதி என்ற கட்டுப்பாடு அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக 712 இடங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த 712 இடங்களிலும் தொடர்ந்து 14 நாட்களில் யாருக்கும் தொற்று இல்லை என்றால் அந்தப் பகுதி முழுமையாக விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்பு 28 நாட்களில் தொற்று ஏற்படாவிட்டால் மட்டுமே  விடுவிக்கப்படும் எனும் நிலை இருந்தது. தற்போது அது 14-ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால் சென்னையின் பல்வேறு இடங்கள் விரைவில் கட்டுப்பாடற்ற பகுதிகளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:
First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading