• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • விமானிக்கு கொரோனா தொற்று - ஒரு தவறால் பாதி வழியில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்

விமானிக்கு கொரோனா தொற்று - ஒரு தவறால் பாதி வழியில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா விமானம்

விமானங்கள் ரத்து

விமானங்கள் ரத்து

கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

  • Share this:
மத்திய அரசின் கொரோனா தடுப்பு விதிகளின்படி, விமானிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகுதான், விமானத்தை இயக்க அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வர, நேற்று இரவு டெல்லியிலிருந்து மாஸ்கோ கிளம்பிய ஏர் இந்தியா ஏர்பஸ் A-320 விமானம், உஸ்பெகிஸ்தான் அருகே சென்று கொண்டிருந்து போது, விமானி ஒருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பாதி வழியிலேயே இரவு 12.30 மணிக்கு டெல்லி திரும்பியுள்ளது.

ரஷ்யாவிலிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விமானம் என்பதால், பயணிகள் யாரும் இல்லை. அந்த விமானத்தில் பயணித்த ஏர் இந்தியா ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பரிசோதனையில் விமானிக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக, பைலட்டின்  மருத்துவ பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த குழு, பாசிட்டிவ் என்பதற்கு பதிலாக நெகட்டிவ் என தவறுதலாக படித்ததே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

மேலும், இது தொடர்பான விரிவான விசாரணைக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தியர்களை அழைத்து வர மற்றொரு ஏர் இந்தியா விமானம் மாஸ்கோ அனுப்பப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also see...

புதுச்சேரியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

 






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: