கொரோனா தொற்று அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் : எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம்

கொரோனா தொற்று அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் : எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா விளக்கம்

கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கிய இரண்டு காரணங்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு முக்கிய இரண்டு காரணங்கள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.

  இது குறித்து அவர் செய்தியளார்களிடம் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. உடனே மக்கள் மெத்தனமாக நடந்துகொண்டனர். கொரோனா செயலிழந்து விட்டதாக நினைத்து விதிமுறைகளை பின்பற்ற தவறினர்.

  கொரோனாவை மக்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். வெளியே போய் பார்த்தால், சந்தைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் கூட்டமாக காணப்படுகின்றது. இவைதான் நோயை பெரிய அளவில் பரப்பும் காரணிகள். முன்னர், ஒருவருக்கு கொரோனா வந்தால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு தொற்றை பரப்பி விடுவார்.

  இப்போது ஒரு கொரோனா நோயாளி ஏராளமானோருக்கு நோயை பரப்பி விடுகிறார். அந்த அளவிற்கு கொரோனா பரவல் விகிதம் வேகமாக பரவியுள்ளது. இதற்கு எளிதாகவும், அதிகமாகவும் பரவக்கூடிய மரபணு உருமாறிய கொரோனாக்கள்தான் முக்கிய காரணம்.

  மனித இனமே கடினமான தருணத்தில் உள்ளது. முக்கியமான வேலை இன்றி வெளியே செல்லாதீர்கள். கூட்டம் சேர வேண்டாம். கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். அலட்சியமாக செயல்பட்டால், இதுவரை கிடைத்த பலன்களையும் இழக்க நேரிடும். நிலைமை கை மீறி போய்விடும்.

  ரந்தீப் குலேரியா


  இந்த நிலைமையை நாம் சரிசெய்யாவிட்டால், கொரோனா பரவல் விகிதம், நாட்டின் சுகாதார வசதிகள் மீது பெரும் கறையை உண்டாக்கி விடும். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அது கொரோனா வருவதை தடுக்காது. இருப்பினும், கொரோனா வந்தால், நோய் தீவிரம் அடைவதை தடுப்பதுடன், இறப்பு விகிதத்தையும் குறைக்கிறது” என்று கூறினார்.

  இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் மட்டும் இதுவரை 2,12,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

  Must Read :  தேர்தல் களத்தில் வேட்பாளர்களையும் விட்டுவைக்காத கொரோனா..

   

  தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் 6,703 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 2,105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: