Home /News /coronavirus-latest-news /

COPAL 19 | ஐ.ஐ.டி டெல்லியுடன் இணைந்து ப்ளாஸ்மா டோனர்களை கண்டறியும் செயலியை உருவாக்கிய எய்ம்ஸ் மருத்துவர்

COPAL 19 | ஐ.ஐ.டி டெல்லியுடன் இணைந்து ப்ளாஸ்மா டோனர்களை கண்டறியும் செயலியை உருவாக்கிய எய்ம்ஸ் மருத்துவர்

அபினவ் சிங் வெர்மா

அபினவ் சிங் வெர்மா

எய்ம்ஸ் மருத்துவர் அபினவ் சிங் வர்மா தொற்று குணமானவர்களிடம் இருந்து ப்ளாஸ்மா தானம் செய்பவர்களைக் கண்டறிவதற்கான COPAL 19 செயலியைக் கண்டுபிடித்துள்ளார்.

    எய்ம்ஸ் மருத்துவர் அபினவ் சிங் வர்மா, ஐ.ஐ.டி டெல்லி மாணவர்களுடன் இணைந்து கொரோனா சிகிச்சைக்காக, தொற்று குணமானவர்களிடம் இருந்து ப்ளாஸ்மா தானம் செய்பவர்களைக் கண்டறிவதற்கான COPAL 19 செயலியைக் கண்டுபிடித்துள்ளார்.

    ப்ளாஸ்மாவை சேகரிப்பதற்கான ரத்தம் கிடைப்பது சிரமமாக உள்ளது. COPAL 19 செயலி மூலமாக ப்ளாஸ்மா அளிக்க முன்வருபவர்களும், பெறுபவர்களையும் ரத்த வகையைக் கொண்டு அறிந்து உதவி கோர முடியும் என்று தெரிவித்துள்ளார் எய்ம்ஸ் மருத்துவர் அபினவ் சிங் வர்மா.

    நேற்று மருத்துவர்கள் தினத்தன்று தொடங்கப்பட்ட இந்த செயலி மூலமாக 70 டோனர்கள் கிடைத்துள்ளதாகவும், செயலி குறித்து தெரிய வரும்போது தானமளிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார்.

     
    Published by:Gunavathy
    First published:

    அடுத்த செய்தி