கொரோனா... கடத்தல் வழக்கில் 7 மாதங்களுக்கு பின் சரணடைந்த அதிமுக பிரமுகர்!

கொரோனா... கடத்தல் வழக்கில் 7 மாதங்களுக்கு பின் சரணடைந்த அதிமுக பிரமுகர்!
வணக்கம் சோமு
  • Share this:
பேராசிரியை கடத்தல் வழக்கில் 7 மாதங்களுக்கு பின்  திருச்சி மலைக்கோட்டை அதிமுக பிரமுகர் சரணடைந்துள்ளார்.

திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி உதவிப் பேராசிரியை, மலைக்கோட்டை பகுதி அதிமுக பொருளாளராக இருந்த வணக்கம் சோமு கடந்த சில மாதங்களுக்கு முன் காரில் கடத்தினார்.  கடத்தல் தகவல் அறிந்து போலீசார் விரட்டிச் சென்றனர். திருச்சி - திண்டுக்கல் சாலையில்  மணப்பாறை அருகே அந்த பெண்ணை சாலையோரம் இறக்கி விட்டு கடத்தல் கும்பல் தப்பியது.

இந்த வழக்கில் வணக்கம் சோமுவின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் வணக்கம் சோமு,  தலைமறைவாகவே இருந்தார். ஒரு தலைக்காதலால்  கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த அவரை அதிமுக தலைமை, பகுதி பொருளாளர் பதவியில் இருந்தும்,  அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது.


இந்நிலையில், 7 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் இன்று காலை சரணடைந்தார். நாடு முழுவதும் கொரோனா பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகள் தவிர விசாரணைக் கைதிகள் இடைக்கால பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எனவே தற்போது சரணடைந்தால், பிணையிலேயே விடுதலையாகி விடலாம். சிறை செல்ல வேண்டியதில்லை என்பதால், கொரோனாவை காரணம் காட்டி அவர் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

Also see...
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading