ஆக்சிஜன் நெருக்கடி : மூச்சுத்திணறல் ஏற்பட்ட கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்த மனைவி

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மூச்சு திணறல் ஏற்பட்ட கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்துள்ள மனைவியின் புகைப்படம் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது.

 • Share this:
  இந்தியாவில் ஒரு நாள் கொரேனா பாதிப்பு 3 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் நிரம்பி உள்ளதால் வெண்டிலேட்டர் படுக்கை கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

  இதனிடைய வெண்டிலேட்டர் படுக்கை கொண்ட மருத்துவமனை கிடைக்காமல் பரிதவித்த மனைவி தனது கணவருக்கு வாயோடு வாய் வைத்து சுவாசம் வழங்கி உள்ள பரிதாப நிலை அரங்கேறி உள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் ரேனு சிங்கால் என்பவரின் கணவர் ரவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

  இதை தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு வெண்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கை இல்லாததால் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.  ஆட்டோவில் செல்லும் வழியில் ரேனு சிங்காலின் கணவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ளது. தனது கணவரின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று ரேணு வாயோடு வாய் வைத்து அவருக்கு சுவாசம் வழங்கி உள்ளார். ஆனால் கடுமையான மூச்சுத்திணறல் இருந்ததால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

  தற்போது ரேனு சிங் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையில் உள்ளார். ஆட்டோவில் அவர் தனது கணவருக்கு சுவாசம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரது இதயங்களை நொறுக்கி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பின் இந்தியாவில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டுமென்றும் என்று பலர் அறிவுறுத்தி உள்ளனர்.
  Published by:Vijay R
  First published: