முகப்பு /செய்தி /கொரோனா / மீண்டும் சுங்கக் கட்டண வசூல் என்பது அநியாய பகற்கொள்ளை - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்

மீண்டும் சுங்கக் கட்டண வசூல் என்பது அநியாய பகற்கொள்ளை - மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம்

சு.வெங்கடேசன், எம்.பி.

சு.வெங்கடேசன், எம்.பி.

”அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்திற்காக வாகனங்கள் ஓரளவு ஓட இருக்கும் நிலையில் மீண்டும் சுங்கக் கட்டண வசூல் என்பது அநியாய பகற்கொள்ளையாகும்.”

  • Last Updated :

மீண்டும் சுங்கக் கட்டண வசூல் என்பது அநியாய பகற்கொள்ளை என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏப்.20-ஆம் தேதி முதல் சில தளர்வுகள் செய்யப்படுமென மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் ஏப்.20-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் உள்ளது.

ஊரடங்கு காரணமாக வாகனப்போக்குவரத்து எதுவும் இல்லாத நிலையில் பெரிய சலுகை வழங்குவது போல சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்திற்காக வாகனங்கள் ஓரளவு ஓட இருக்கும் நிலையில் மீண்டும் சுங்கக் கட்டண வசூல் என்பது அநியாய பகற்கொள்ளையாகும்.

குறைந்தபட்சம் ஊரடங்கு முற்றிலும் விலக்கிக்கொள்ளப்படும் வரையிலாவது சுங்கக் கட்டண வசூல் கொள்ளை நிறுத்தப்பட வேண்டுமென்று மத்திய அரசையும் நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தையும் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Also see:

top videos

    First published:

    Tags: CoronaVirus, Lockdown, Su venkatesan