Home /News /coronavirus-latest-news /

ராயபுரத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

ராயபுரத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

சென்னையில், 60.87 சதவீதம் ஆண்களும், 39.10 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ராயபுரம் மண்டலத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் பாதிப்பு எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் ஒரே நாளில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மே 17-ம் தேதி உறுதி செய்யப்பட்ட 639 தொற்றுகளில், சென்னையில் 480 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை, சென்னையில் மொத்தம் பாதித்துள்ள 6,750 பேரில் 1,498 பேர் குணமடைந்துள்ளனர்.  53 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரில் சென்னையில் பாதிக்கப்பட்டோர்  60 சதவிகிதம். அதேபோல், இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளில் சென்னையில் தான்  68 சதவிகித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில், நேற்று கண்டறியப்பட்ட தொற்றுகளில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 77 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 73 பேரும், கோடம்பாக்கம் 68 பேரும்,  தண்டையார்பேட்டையில் 53 பேரும், திரு.வி.க.நகரில் 40 பேரும், அண்ணாநகரில் 40 பேரும், அடையாறு 33 பேரும், வளசரவாக்கத்தில் 28 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாதவரத்தில் 16 பேரும்,  அம்பத்தூரில் 13 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும், திருவொற்றியூரில் 10 பேரும், பெருங்குடியில் 6 பேரும், ஆலந்தூரில் 3 பேரும், மணலியில் 2 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ராயபுரம், கோடம்பக்கத்தில் மட்டுமே அதிகபட்ட பாதிப்பு இருந்த நிலையில், தேனாம்பேட்டையில் ஒரே நாளின் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 70 முதல் 75 சதவீத வைரஸ் தொற்று ஏற்கனவே வைரஸ் பாதித்த பகுதிகளில் உள்ள இல்லங்களில் இருந்துதான் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதிகளில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 177வது வார்டில்  மட்டும் 150க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, இந்த பகுதிகளில் தொற்றை கட்டுப்படுத்த பகுதி வாரியாக திட்டமிடல் பணியை மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் 1185

கோடம்பாக்கம் 1041

திரு.வி.க.நகர் 790

தேனாம்பேட்டை 746

தண்டையார்பேட்டை 581

அண்ணா நகர் 554

வளசரவாக்கம் 522

அடையாறு 367

அம்பத்தூர் 317

திருவொற்றியூர் 147

மாதவரம் 121

சோழிங்கநல்லூர் 95

மணலி 86

பெருங்குடி 86

ஆலந்தூர் 80

சென்னையில், 60.87 சதவீதம் ஆண்கள், 39.10 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Also see...






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vaijayanthi S
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி