• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மெல்ல உயிர்த்தெழுகிறது 17,000 உயிர்களை பறிகொடுத்த இத்தாலி: மீண்டுவந்தது எப்படி ? இத்தாலி பிரதமர் உருக்கம்..!

மெல்ல உயிர்த்தெழுகிறது 17,000 உயிர்களை பறிகொடுத்த இத்தாலி: மீண்டுவந்தது எப்படி ? இத்தாலி பிரதமர் உருக்கம்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 7 விழுக்காடாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு விழுக்காடாக குறைந்துள்ளது.

  • Share this:
    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட, அதிக உயிர்களை பறிகொடுத்த நாடான இத்தாலி, தற்போது மீண்டெழத் தொடங்கியுள்ளது. இதையடுத்து இம்மாத இறுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் குசெப் கொன்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் மிரட்டி வந்தாலும், அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலிதான். உலகில் கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலி கொடுத்த நாடாக இத்தாலி உள்ளது. இதுவரை 17,500-க்கும் மேற்பட்ட உயிர்களை இத்தாலி இழந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 7 விழுக்காடாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஒரு விழுக்காடாக குறைந்துள்ளது.

    அதேபோல் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சரியத் தொடங்கியுள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு ஒரேநாளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 919 ஆக இருந்த நிலை மாறி, தற்போது ஒரு நாளில் உயிரிழப்போர் எண்ணிக்கை 542 ஆக குறைந்துள்ளது. எனினும் எச்சரிக்கையாகவே இருக்கப்போவதாகவும், கட்டுப்பாடுகளை படிப்படியாகவே தளர்த்தப்போவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவத் தொடங்கிய பிறகு முதல்முறையாக பிரிட்டன் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ள இத்தாலி பிரதமர் குசெப் கொன்டே, நிலைமை கட்டுக்குள் வருவதை விஞ்ஞானிகள் உறுதி செய்தால், இம்மாத இறுதியில் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த தொடங்குவோம் என தெரிவித்துள்ளார். இத்தாலியில் அதிக முதியவர்கள் உயிரிழந்த நிலையில், 104 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவை வென்றுள்ளார்.

    தன்னம்பிக்கையும், துணிவுமே கொரோனாவை வெல்ல உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் நீடித்த போர் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சமடைந்த அந்நாட்டு மக்கள், தற்போது தங்கள் தாயகத்துக்கு திரும்பி வருகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஈரானில் கொரோனாவின் தாக்கம் கடுமையாக உள்ளதால், அங்குள்ள ஆப்கானிஸ்தானியர்கள் தாய்நாட்டுக்கு திரும்பி வருகின்றனர்.

    ரஷ்யாவில் பகுதிவாரியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மது விற்பனை அதிகரிக்க வழி செய்துள்ளது. வோட்கா விற்பனை 31 விழுக்காடு, விஸ்கி விற்பனை 49 விழுக்காடு மற்றும் பீர் விற்பனை 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: