ஹோம் /நியூஸ் /கொரோனா /

ஊரடங்கு காலத்தில் குறையும் சென்னையின் மாசுபாடு - ஆய்வு

ஊரடங்கு காலத்தில் குறையும் சென்னையின் மாசுபாடு - ஆய்வு

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டதாலும் காற்று மாசுபாடு பெருமளவில் குறைந்து காணப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. இந்த ஆய்வில் கும்மிடிப்பூண்டி,கோயம்பேடு, ராயபுரம், பெருங்குடி, ஆலந்தூர், மணலி, வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள காற்று மாசுபாடு கண்காணிப்பு கருவிகளில் பதிவான சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, நுண்துகள் மாசு ஆகியவை  கணக்கெடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின்படி முதல் ஊரடங்கிற்கு முந்தைய காலமான மார்ச்  1 முதல் மார்ச் 23 வரையிலான காலத்தில்  காற்று தரக் குறியீடானது (AQI) சராசரியாக 61.5 ஆகவும் முதலாம் ஊரடங்கு காலமான மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரையிலான காலத்தில் காற்று தரக் குறியீடு 42.3 ஆகவும் இரண்டாம் ஊரடங்கு காலமான ஏப்ரல் 15 முதல்  முதல்  மே 3 வரையிலான காலத்தில் காற்று தரக் குறியீடு 29.3 ஆகவும் குறைந்திருந்தது தெரியவந்தது.

மூன்றாம் ஊரடங்கானது சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டதால் அந்த நாட்களில் மட்டும் காற்று தரன் சற்று குறைந்து AQI  34.3 ஆக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு முந்தைய காலத்தில் .37.4 சதவிகித நாட்கள் மட்டுமே காற்று தரக் குறியீடானது நல்ல நிலையில் இருந்ததாகவும் முதலாம் ஊரடங்கு காலத்தில் 78.6 சதவிகிதம் காற்று தரக் குறியீடு நல்ல நிலையில் இருந்ததாகவும், இரண்டாம் ஊரடங்கு காலத்தில் 94.7 சதவிகிதம் காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்ததாகவும் இதன் மூலம் அரசு அறிவித்த அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் தீவிரமாக கடைபிடித்திருப்பது தெரிய வருவதாகவும் மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு காலமான ஏப்ரல் மாத அளவீடுகளை 2018, 2019ஆம் ஆண்டு அளவீடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் காற்று மாசுபாடு பாதிக்குப் பாதியாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

2018 ஆண்டு ஏப்ரல் மாதம் காற்று தரக் குறியீடானது 56.6 ஆகவும், 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் 60.7 ஆகவும் இருந்த AQI இந்த ஆண்டு ஏப்ரலில் 33. 0 ஆக பதிவாகியுள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

ஏப்ரல்14-ஆம் தேதிக்கு பிறகு நாகையில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று : காரணம் என்ன?


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Air pollution, Lockdown