சரணடைய வைத்த கொரோனா : பைக் திருடிவிட்டு போலீஸாரிடம் இருந்து தப்பியோடியவர் தானாக முன்வந்து சரண்..

புதுச்சேரியில் தப்பியோடிய பைக் திருடர் தனக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்தவுடன் மீண்டும் போலீசாரிடம் சரண் அடைந்தார்.

சரணடைய வைத்த கொரோனா : பைக் திருடிவிட்டு போலீஸாரிடம் இருந்து தப்பியோடியவர் தானாக முன்வந்து சரண்..
பைக் திருடர் சரண்
  • Share this:
புதுச்சேரி  அரியாங்குப்பம் ராம்சிங் நகரை சேர்ந்தவர் ரமணா. கடந்த 20-ஆம் தேதி காலை முதலியார்பேட்டை உதவி ஆய்வாளர் தமிழரசன் தலைமையில் மரப்பாலம்  சிக்னலில் வாகன சோதனை நடைபெற்றது. இதில் சந்தேகப்படும்படியாக வந்த ரமணாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரமணா மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவிற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவர் போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக கழிவறைக்கு செல்வதாக கூறி,  கழிவறையின் ஜன்னல் வழியாக ஏறி குதித்து, வெளியில் தப்பி சென்றார். இதனிடையே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் கொரோனா நோயாளியை காணவில்லை என கோரிமேடு போலீசில் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கொரொனா தொற்றுடன் தப்பிசென்ற ரமணாவை தேடி வந்தனர்.

இதனிடையே தனக்கு கொரொனா இருப்பதை பத்திரிக்கைகள் மூலம் அறிந்த ரமணா உடனே தான் இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், சுகாதாரத்துறையினர் சென்று அவரை மருத்தவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ரமணாவிற்கு தொற்று நீங்கியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை மருத்துவமனையில் இருந்து முதலியார்பேட்டை போலீசார் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

மேலும் படிக்க...

எதிர்த்து கேள்வி கேட்டால் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுவாங்க... ஒரு வருடமாக சம்பளமே இல்லாமல் பணியாற்றும் மருத்துவர்கள்..

அங்கு போலீசார் ரமணாவிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்  பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த 13 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading