11 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் குணமடைவோர் சதவீதம் அதிகரிப்பு...!

கோயம்பேடு மார்க்கெட் தொற்று பரவல் காரணமாக பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் குணமடைவோர் சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்தது.

11 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் குணமடைவோர் சதவீதம் அதிகரிப்பு...!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: May 9, 2020, 10:58 PM IST
  • Share this:
11 நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் குணமடைவோர் சதவீதம் அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களாக குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் சதவீதமும் குறைவாக இருந்தது. ஆனால், சனிக்கிழமை (இன்று) ஒரே நாளில் 219 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியதால் தமிழ்நாட்டில் குணமடைவோர் சதவீதம் சற்று உயர்ந்துள்ளது. இதுவரை இத்தனை பேர் ஒரே நாளில் வீடு திரும்பவில்லை.

ஏப்ரல் 27க்கு முன்பு வரை, அதாவது கோயம்பேடு மார்க்கெட் மூலம் தொற்று பரவுவதற்கு முன்னால் வரை தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் கிடுகிடுவென குணமடைந்து வந்தனர். டெல்லியிலிருந்து வந்தவர்கள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரம் அது. ஏப்ரல் 12ம் தேதி குணமடைவோர் சதவீதம் 4.65% ஆக இருந்தது. இரண்டு வாரத்தில், ஏப்ரல் 27ம் தேதி 56.84% ஆக உயர்ந்திருந்தது. அன்று வரை 1101 பேர் குணமடைந்திருந்தனர்.


அதன் பிறகு கோயம்பேடு மார்க்கெட் தொற்று பரவல் காரணமாக பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியதால் குணமடைவோர் சதவீதம் தொடர்ந்து சரிந்து வந்தது. நேற்று 26.71% பேர் குணமடைந்திருந்தனர். (இன்று) சனிக்கிழமை 219 பேர் வீடு திரும்பியதன் காரணமாக  1.2% அதிகரித்து 27.91 சதவீதமாக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 171 வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்ட வாரியாக குணமடைந்தோர் பட்டியல்


இதுவரை தமிழகத்தில் மொத்தம் 1824 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதில் 24 கொரோனா நோயாளிகள் அறிகுறிகள் இல்லாததால் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களும் இந்த 1824ல் அடக்கம்.
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading