• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பாதித்த அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் குணமாகி வீடு திரும்பினார்

கொரோனா பாதித்த அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் குணமாகி வீடு திரும்பினார்

அம்மன் அர்ஜூனன் MLA

அம்மன் அர்ஜூனன் MLA

கொரோனா பாதித்த அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.

  • Share this:
    கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் குணமடைந்து வீடு திரும்பினார். இவர் அண்மையில் குடும்பத்தினருடன் மதுரை சென்று திரும்பினார்.

    இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அம்மன் அர்ஜூனன் மற்றும் குடும்பத்தினர் 3 பேருக்கு தொற்று உறுதியானது.

    பின்னர், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அவரின் பேத்தி டிஸ்ஜார்ச் ஆன நிலையில், இன்று எம்எல்ஏ மற்றும் அவரின் மகள், மருமகன் குணமடைந்து வீடு திரும்பினர்.

    Also see:

     

    இதனிடையே, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கோவையில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: