• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • டாஸ்மாக் திறப்பு ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தும், நோய்த்தொற்றைப் பரவலாக்கும் - சீமான் எச்சரிக்கை

டாஸ்மாக் திறப்பு ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தும், நோய்த்தொற்றைப் பரவலாக்கும் - சீமான் எச்சரிக்கை

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி.

தனிமைப்படுத்தலும் தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

  • Share this:
    டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அதிமுக அரசின் முடிவு, 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

    சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ”வரும் 7ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும்.

    தனிமைப்படுத்தலும் தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக் கூடாது. தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக் கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது.

    அத்தகைய வரலாற்றுப் பிழையைச் செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.”

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: