கொரோனோ - சென்னையில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு

சென்னையில் கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் தலைமையிலான மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கொரோனோ - சென்னையில் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு
கோப்புப்படம்
  • Share this:
கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவை தமிழகத்திற்கு அனுப்பியது. இந்தக் குழுவானது நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சுகாதாரத் துறை உயரதிகாரிகளுடன் தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கைப் பணிகள், சிகிச்சை அளிக்கக்கூடிய விவரம் உள்ளிட்டவற்றை மத்திய குழுவினருக்குத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மத்திய குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலர் ஆகியோர் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர். பிறகு, கேபி பார்க் பகுதியில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.


மேலும், திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புலியந்தோப்பு உள்ள காய்ச்சல் முகாம், சூளையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி ஆகிய இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில், ஸ்க்ரீனிங் செண்டர் இருக்கக்கூடிய அதிநவீன வசதிகள் கொண்ட கிங் மருத்துவமனையையும் மத்திய குழு ஆய்வு செய்தனர்.

அதன் பின்பு மாலை 4.30 மணிக்கு தமிழகத்தில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான 10 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக மருத்துவக் குழுவினரும் பங்கேற்கும் ஆலோசனையானது நடைபெற இருக்கிறது.

Also see:

 

நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றனர். அங்கு செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகு மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பிறகு தமிழகத்தில் எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு இந்தக் குழுவினர் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய குழுவினர் விவரம்

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமை வகிக்கும் அந்தக் குழுவில் பின்வரும் 6 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

1. ராஜேந்திர ரத்னு, கண்காணிப்பு அதிகாரி

2. டாக்டர் ரவீந்திரன், இயக்குனர், மின்னனு மருத்துவ ஆவன இயக்குனர்

3. டாக்டர்.சுகாஷ் தண்டோர், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இணை இயக்குநர்

4. டாக்டர்.பிரவீன்தொற்றுநோய் தடுப்பு நிபுணர்

5. டாக்டர். சுவரூப் சாகு, ஜிப்மர்

6. டாக்டர். சதிஷ், ஜிப்மர்
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading