• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உலகம் முழுக்க 26 கோடி பேர் பட்டினியால் அவதிப்படுவர்... கொரோனாவால் பட்டினி இரட்டிப்பாகும் - ஐநா கணிப்பு!

உலகம் முழுக்க 26 கோடி பேர் பட்டினியால் அவதிப்படுவர்... கொரோனாவால் பட்டினி இரட்டிப்பாகும் - ஐநா கணிப்பு!

கோப்பு படம்

கோப்பு படம்

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் மட்டும் உலகில் 26 கோடியே 50 லட்சம் மக்கள் பட்டினியில் தவிக்கும் சூழல் உருவாகும் என்று ஐநா உலக உணவு திட்ட அமைப்பு கணித்துள்ளது.

  • Share this:
    கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டில் மட்டும் உலகில் 26 கோடியே 50 லட்சம் மக்கள் பட்டினியில் தவிக்கும் சூழல் உருவாகும் என்று ஐநா உலக உணவு திட்ட அமைப்பு கணித்துள்ளது.

    கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால், உலகளாவிய சுற்றுலா, வணிகம் உள்ளிட்ட முக்கிய வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா காரணமாக புதிதாக 13 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஐநா அமைப்பு கூறியுள்ளது.

    ஏற்கனவே உலக அளவில் பட்டினியால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சமாக உள்ளது. ஏற்கனவே பசியால் வாடுவோருக்கு கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக உணவு திட்ட மூத்த பொருளாதார நிபுணர் ஆரிஃப் உசேன் தெரிவித்துள்ளார்.











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube






    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: