Home /News /coronavirus-latest-news /

7 -ம் அறிவு போதிதர்மர் மீம்ஸ் - ஸ்ருதிஹாசன் வேண்டுகோள்

7 -ம் அறிவு போதிதர்மர் மீம்ஸ் - ஸ்ருதிஹாசன் வேண்டுகோள்

நடிகை ஸ்ருதிஹாசன்

நடிகை ஸ்ருதிஹாசன்

போதி தர்மரோடு தன்னை இணைத்து மீம்ஸ் வெளியிடுவதை நிறுத்துமாறு நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்த படம் ஏழாம் அறிவு. இந்தப் படத்தின் வில்லன் வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்து நாயின் மூலம் வைரஸ் பரப்புவார். அப்போது அவரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற போதிதர்மரை உயிர்பிழைக்க வைப்பார் ஸ்ருதிஹாசன். 2011-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை

தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கொடிய வைரஸை அழிக்க போதி தர்மரை மீண்டும் உயிர்பிக்க வைத்து அனைவரையும் காப்பாற்றுமாறு ஸ்ருதிஹாசனை கிண்டல் செய்து மீம்ஸ்களை உருவாக்கினர் நெட்டிசன்கள்.

இதைப்பார்த்த ஸ்ருதிஹாசன், தயவு செய்து தன்னைப் பற்றிய மீம்ஸ் பரப்புவதை நிறுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் பகுதியில் ஸ்ருதிஹாசன் வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் லண்டன் சென்று வந்ததால் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.




மேலும் படிக்க: கொரோனா பாதிப்பு : இந்தியாவின் தற்போதைய நிலை..? - முழு விவரம்



Published by:Sheik Hanifah
First published:

Tags: Actress shruti Haasan, CoronaVirus

அடுத்த செய்தி