நடிகை ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார்

நடிகை ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்தார்

நடிகை ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

 • Share this:
  நடிகை ஷகிலா மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 30 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் ஷகிலா 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஷகிலா திரையுலகின் ஆரம்ப காலங்களில் ஆபாச படங்களில் நடித்த இவர், அதன்பின் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

  நடிகை ஷகிலா தற்போது சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தனது தனி திறமையால் மக்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ளார். இதனிடையே ஷகிலாவின் வாழ்க்கை குறித்த படமும் 'ஷகிலா' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் நடிகை ஷகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் இணைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: