வீட்டுக்குள் இருந்து உலகைக் காப்பாற்றும் வாய்ப்பு - நடிகை மீனா

வீட்டுக்குள் இருந்து உலகைக் காப்பாற்றும் வாய்ப்பு - நடிகை மீனா
நடிகை மீனா
  • Share this:
வீட்டுக்குள்ளேயே இருந்து உலகைக் காப்பாற்றும் ஒரு அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது என்று நடிகை மீனா கூறியுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருக்கும் நடிகை மீனா, “இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியிருந்தாலும், நிறைய பேர் விளையாட்டாக வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இதுபோல் அரசு சொல்வதை மக்கள் கேட்காததால் தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். தினமும் நூற்றுக் கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.


அமெரிக்காவில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை நமக்கு வராமல் இருப்பதற்கு நாம் அரசு சொல்வதை கேட்க வேண்டும்.

எவ்வளவு நேரம் வீட்டில் இருப்பது, போர் அடிக்கிறது என்று சொல்லாதீர்கள். வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுடன் விளையாடுங்கள். அவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுங்கள். வீட்டு வேலைகளைப் பாருங்கள். சமையலறையில் உதவி செய்யுங்கள்.

யோகா, தியானம் போன்ற பல விஷயங்கள் செய்வதற்கு இருக்கின்றன. வீட்டுக்குள்ளேயே இருந்து உலகத்தை காப்பாற்றும் ஒரு அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. நீங்கள் ஜாக்கிரதையாக பாதுகாப்புடன் இருந்தால் தான் உங்களது குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும். தயவு செய்து பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்” என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க: த்ரிஷா டூ சன்னி லியோன்...! ஊரடங்கு நாளில் டிக்டாக் வீடியோ வெளியிட்ட நடிகைகள்!First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading