கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க யாகம் நடத்திய எம்.எல்.ஏ!

கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க யாகம் நடத்திய எம்.எல்.ஏ!
கொரோனா
  • Share this:
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காக்க சட்டமன்ற உறுப்பினர் ரோஜா சிறப்பு யாகம் நடத்தியுள்ளார்.

கொடிய வைரஸான கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகம் முழுக்க 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் ஊரடங்கு மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.


இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்க காவல்துறையினர் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து தனது வீட்டில் சிறப்பு யாகத்தை நடத்தியுள்ளார்.இந்த சிறப்பு யாகம் கொரோனாவின் பிடியிலிருந்து மக்களைக் காப்பதற்காக, பிரார்த்தனை செய்துகொண்டு நடத்தப்பட்டதாக ரோஜா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: கொரோனாவிலிருந்து தப்பிக்க ஊரடங்கு மட்டும் போதாது- உலக சுகாதார நிறுவனம்
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்