'எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு' - பிரபல ஹாலிவுட் நடிகர் உருக்கம்

பிரபல ஹாலிவுட் நடிகர் உருக்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ், தனக்கும் தனது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 • Share this:
  அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ், தனக்கும் தனது மனைவி ரீட்டா வில்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் இருக்கும் தங்களுக்கு சளி, உடல்சோர்வு மற்றும் காய்ச்சல் இருப்பதாகவும், சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஹாங்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் வரை தாங்கள் தனிமைப்படுத்தப்படுவோம் என்றும், நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் எனவும் டாம் ஹாங்ஸ் கூறியுள்ளார்.

  Published by:Sankaravadivoo G
  First published: