அவனை விளக்குமாற்றால் அடித்து விரட்டுங்கள் மோடி அய்யா - சூரி

நடிகர் சூரி

 • Share this:
  கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில் 8 வது நாளில் தனது அனுபவத்தை நடிகர் சூரி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

  அதில், குளியலறையில் தனது மகனை குளிக்க வைக்கும் சூரி, மகனின் சேட்டைகளை தாங்க முடியாமல் ஒரு வழியாக குளிக்க வைக்கிறார். அப்போது பேசும் அவர், “மோடி அய்யா உங்களைக் கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். வெளியில் போனால் கொரோனா கொன்றுவிடும் என்கிறீர்கள். வாஸ்தவமான பேச்சுதான் அய்யா. வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கி பசங்க நம்மை கொன்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.

  உங்களுக்கு இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் ஒத்துழைப்பு தருகிறோம். எப்படியேனும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விளக்குமாற்றால் அடித்து அதை விரட்டி விடுங்கள் அய்யா.

  மோடி அய்யா அப்படியே அந்த சீன பிரதமருக்கு ஒரு போன் செய்து இவ்வளவு பிரச்னைக்கும் மூலகாரணமாக இருந்த அந்த வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாற்றால் அடிக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் புத்தி வரும்.

  அதற்குள் அவரது வீட்டிலிருக்கும் கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்கிறது பெண்ணின் குரல். உடனே அவர் சுத்தம் செய்யத் தொடங்கும் போது மீண்டும் அந்தப் பெண் குரல் கழிப்பறை சுத்தம் செய்யும் ஆசிட்டை பயன்படுத்தி கழுவுமாறு கூறுகிறது. பெண் கூறியபடி சுத்தம் செய்யத் தொடங்கும் சூரி, நான் குளிக்கும் போதே சோப்பை பயன்படுத்தமாட்டேன். கழிப்பறை சுத்தம் செய்ய இத்தனையா என்று நகைச்சுவையாக கேட்கிறார்.

  தொடர்ந்து பேசும் அவர், “நம் வீட்டு கழிப்பறையை சுத்தம் செய்யும் போதே மூச்சு முட்டுகிறது. ஆனால் நாம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாதாள சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்கிறார்களே அவர்களின் கஷ்டம் இப்போதுதான் எனக்கு புரிகிறது. மனதாலும், உடலாலும் சுத்தமாக இருப்பது அவர்கள் தான். நீங்கள் எப்போதும் நல்லா இருக்க வேண்டும்.” என்று வீடியோவில் தெரிவித்துள்ளார் சூரி.  மேலும் படிக்க: மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல..! ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி பதிவு
  Published by:Sheik Hanifah
  First published: