நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று? சுவாசிப்பதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று? சுவாசிப்பதில் சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி..
நடிகர் ராமராஜன்
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 12:20 PM IST
  • Share this:
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்புநிலைக்குத் திரும்பியிருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரையில், 60,23,627 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 5,25,420 ஆக அதிகரித்துள்ளது. இதில் இதுவரையில், 4,70,192 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8,618 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகரும், முன்னாள் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான ராமராஜன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு இன்னும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.


எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்ளிட்ட கிராமங்களை மையப்படுத்திய கதையில் நடித்து மக்களை மகிழ்வித்த ராமராஜன், திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். திரைத்துறையைத் தாண்டி அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வந்த அவர் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.முன்னதாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். அதேபோல் நடிகர் விஷால் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி உள்ளிட்டோரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று நலமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading