கொரோனா காலத்தில் ஜோர்டானில் சிக்கிய ஆடுஜீவிதம் படக்குழு - பிரித்விராஜ் உருக்கம்

கொரோனா காலத்தில் ஜோர்டானில் சிக்கிய ஆடுஜீவிதம் படக்குழு - பிரித்விராஜ் உருக்கம்
நடிகர் பிரித்விராஜ்
  • Share this:
கொரோனா பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆடுஜீவிதம் படக்குழு ஜோர்டானில் சிக்கித் தவித்து வருகிறது.

ஆடுஜீவிதம் என்ற நாவலை மையப்படுத்தி பிளெஸ்ஸி இயகத்தில் பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஜோர்டான் நாட்டில் வாடி ரம் பாலைவனப்பகுதியில் நடைபெற்று வந்தது. கேரளாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்திருக்கும் நஜீப் என்ற கதாபாத்திரம் அங்கு சென்று கொத்தடிமையாக்கப்பட்டு தப்பிக்க எடுக்கும் முயற்சிகளே ஆடுஜீவிதம் படத்தின் கதை.

ஜோர்டான் நாட்டின் பாலைவனத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்த படக்குழு கொரோனா அச்சத்தால் பல்வேறு நடவடிக்கைகளை சந்திக்க நேரிட்டது. மேலும் ஜோர்டான் நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க அந்த அரசு முடிவு செய்ததால் ஆடுஜீவிதம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்த ஓமன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் தலீப் அல் பலூஷி மற்றும் அவரது மொழிபெயர்ப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் படக்குழுவில் இருக்கும் 58 பேரை மீட்குமாறு இயக்குநர் பிளெஸ்ஸி கேரள திரைப்படச் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் கேரள முதல்வருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது


இயக்குநர் ப்ளெஸ்ஸி, கேரள திரைப்படச் சங்கத்துக்கு, தங்களது 58 பேர் கொண்ட குழுவை மீட்டுச் செல்லுமாறு உதவி கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தை கேரள திரைப்படச் சங்கம் அம்மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரித்விராஜ், “எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். அவர் 72 மணி நேரத்துக்கு ஒருமுறை எங்களை பரிசோதிக்கிறார். இதுதவிர ஜோர்டான் அரசு நியமித்துள்ள மருத்துவரும் எங்களை பரிசோதிக்கிறார்.

இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் குழுவில் உள்ள 58 பேரை மீட்பது இந்திய அதிகாரிகளின் முக்கியமான கவலையாக இருக்காது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் எங்களைப் போல் பலர் வெளிநாடுகளிலிருந்து தாய்நாடு திரும்ப காத்திருக்கின்றனர். அரசு அவர்களை எல்லாம் அழைத்துவரும் சரியான நேரம் வரும் போது நாங்களும் நாடு திரும்பவோம். அதுவரை நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க: கொரோனா வைரஸ் தாக்கி ‘ஸ்டார் வார்ஸ்' நடிகர் மரணம்



First published: April 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading