Home » News » Coronavirus-latest-news » ACTOR KARUNAS AFFECTED BY CORONA MSB

எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா பாதிப்பு

நடிகரும் சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ பவுன் ராஜூக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா பாதிப்பு
கருணாஸ்
  • Share this:
தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,08,784 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 4,349 பேர் நோய் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்திருக்கும் நிலையில் அதற்கு பின்னர் அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கின்றனர்.

இந்நிலையில் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகருமான கருணாஸூக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவரது பாதுகாவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கருணாஸூக்கும் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.


இதேப் போன்று பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன் ராஜூவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது முன்கள பணியாளர்கள் பலரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading