கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு... நடிகர் ஜாக்கி சான் அறிவிப்பு!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு... நடிகர் ஜாக்கி சான் அறிவிப்பு!
ஜாக்கி சான்
  • News18
  • Last Updated: February 11, 2020, 10:19 AM IST
  • Share this:
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் நோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் ஆராய்சியாளர்கள் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில் நடிகர் ஜாக்கிஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரோனாவுக்கு விரைவில் மருந்து கண்டுபிடிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும், அவ்வாறு கண்டுபிடிக்கும் தனிநபர் அல்லது அமைப்பிற்கு நன்றி சொல்லும் விதமாக ஒரு கோடி ரூபாய் பரிசளிக்க உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்.

Also read... சீனாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா..! 1000-க்கும் மேல் உயிரிழப்பு

ஏற்கனவே மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுக்காக ஜாக்கி சான் நன்கொடை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.Also see...
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading