இந்தியாவிற்கு வந்த கொரோனா வைரஸை வரவேற்கும் தொனியில் வீடியோ வெளியிட்ட நடிகை சார்மி பின்னர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது ஐரோப்பியா மற்றும் அமெரிக்க கண்ட நாடுகள் வரை பரவியுள்ளது. சீனா மற்றும் உலக நாடுகளில் தற்போது வரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கேரள மாநிலத்தில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தனர்.
இந்த நிலையில், மேலும் 2 பேர் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தாலியில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கும், தெலங்கானவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
கொரோனா குறித்த செய்திகளைக் கேட்டு பலரும் அச்சமடைந்திருக்கும் நிலையில் நடிகை சார்மி கொரோனாவை வரவேற்கும் தொனியில் தனது டிக் டாக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் ஆல் தி பெஸ்ட் நண்பர்களே. உங்களுக்குத் தெரியுமா? கொரோனா வைரஸ் டெல்லி, ஹைதரபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் வந்து விட்டதாம். இத்தகவலை செய்திகளின் மூலம் தெரிந்து கொண்டேன். இறுதியாக கரோனா வைரஸ் இங்கேயும் வந்துவிட்டது” என்று வரவேற்கும் தொனியில் சார்மி பேசியிருந்தார்.
இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் பலரும் சார்மியை விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் அந்த வீடியோவை நீக்கிய நடிகை சார்மி அதற்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.