முகப்பு /செய்தி /கொரோனா / ட்வீட் செய்த ரன்னிங் புகைப்படங்கள்: ஊரடங்கை மீறினாரா நடிகர் ஆர்யா?

ட்வீட் செய்த ரன்னிங் புகைப்படங்கள்: ஊரடங்கை மீறினாரா நடிகர் ஆர்யா?

 நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா

சென்னையில் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில் வாக்கிங் சென்றால் முதற்கட்டமாக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளது. இந்நிலையில் நடிகர் ஆர்யா சிக்கியது எப்படி?

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் ஜீலை 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் மருத்துவ தேவைகள், அத்தியாவசிய மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை நடிகர் ஆர்யா அவரின் பயிற்சியாளருடன் ரன்னிங் சென்றுள்ளார் .

சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளார். அண்ணாநகர், ஜமாலியா, ஐ.சி.எப் உள்ளிட்ட பகுதிகளுக்கு விதிகளை மீறி சென்றுள்ளார். சுமார் 2 மணி நேரம் ஜாக்கிங் சென்றதாக டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் நடிகர் ஆர்யா வெற்றி குறியை பதிவு செய்துள்ளார்.

இப்படி விதி மீறியவர்களிடம் இருந்து இதுவரை 1 கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும், ஊரடங்கு காலத்தில் சாலை, பூங்காக்களில் நடைபயிற்சி செல்ல தடை உள்ளது.

மேலும் படிக்க...

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபரைக் கண்டறிந்ததா காவல்துறை?

எனவே, நடைபயிற்சி உள்ளிட்ட விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்து உள்ளது. எனவே மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

First published:

Tags: Actor Arya