• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா பரவல் என பரபரப்பு கடிதம்... கப்பல் கேப்டனை விமர்சித்த அமெரிக்க கடற்படை செயலர் பதவி விலகல்

கொரோனா பரவல் என பரபரப்பு கடிதம்... கப்பல் கேப்டனை விமர்சித்த அமெரிக்க கடற்படை செயலர் பதவி விலகல்

அமெரிக்க கடற்படை செயலர் தாமஸ் மோட்லி

அமெரிக்க கடற்படை செயலர் தாமஸ் மோட்லி

  • Share this:
    அமெரிக்க கடற்படை செயலர் தாமஸ் மோட்லி தன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

    யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் கப்பலின் கேப்டன் பிரட் க்ரோஸியர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அந்தக் கப்பலின் வீரர்கள் மத்தியில் உரையாற்றிய தாமஸ் மோட்லி, க்ரோஸியரை முட்டாள் என்று குறிப்பிட்டார். தாமஸ் மோட்லியின் இந்த பேச்சு ஊடகங்களில் வெளியான நிலையில் தன் பதவியை மோட்லி ராஜினாமா செய்துள்ளார்.

    முன்னதாக கப்பலில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வீரர்களை காக்க வேண்டுமென்று கேப்டன் பிரட் க்ரோஸியர் எழுதிய கடிதம் வெளியான நிலையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதற்காக அவரை விமர்சித்த தாமஸ் மோட்லியும் தற்போது பதவி விலகியுள்ளார்.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: