முகப்பு /செய்தி /கொரோனா / புதுச்சேரி முதல்வருக்கு ஆம் ஆத்மி கட்சி பாராட்டு!

புதுச்சேரி முதல்வருக்கு ஆம் ஆத்மி கட்சி பாராட்டு!

”சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பித்து, அரசு இயந்திரத்தை முழுமையாக இயக்கி கொரோனாவிலிருந்து புதுச்சேரியை காப்பாற்றியதற்காக நன்றி”

”சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பித்து, அரசு இயந்திரத்தை முழுமையாக இயக்கி கொரோனாவிலிருந்து புதுச்சேரியை காப்பாற்றியதற்காக நன்றி”

”சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பித்து, அரசு இயந்திரத்தை முழுமையாக இயக்கி கொரோனாவிலிருந்து புதுச்சேரியை காப்பாற்றியதற்காக நன்றி”

  • 1-MIN READ
  • Last Updated :

புதுச்சேரியை கொரோனாவில் இருந்து காப்பாற்றியதற்காக முதல்வர் நாராயணசாமியை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ரவி சீனிவாசன் பாராட்டினார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் ரவி சீனிவாசன் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்தார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்திய முதல்வர் நாராணசாமியை பாராட்டிய அவர், சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பித்து, அரசு இயந்திரத்தை முழுமையாக இயக்கி கொரோனாவிலிருந்து புதுச்சேரியை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

கொரோனா நிவாரணத்துக்காக மத்திய அரசு நிதி உதவி வழங்க விட்டாலும் மாநில நிதியை கொண்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 2000 ரூபாய் மற்றும் இலவச அரிசி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

புதுச்சேரியில் ரேஷன் கார்டு இல்லாமல் ஏழை எளியவர் பலர் இருப்பதாகவும் அவர்களை கண்டறிந்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என ரவி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

First published:

Tags: Aam Aadmi Party, Lockdown, Puducherry, Puthucherry cm