புதிய அவதாரம் எடுக்கும் ’ஆடி தள்ளுபடி’ விற்பனை

ஆடி மாத சிறப்பு தள்ளுபடி விற்பனை பண்டிகைக் காலத்திற்கு நிகரான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு ஆடி மாத விற்பனை மந்தமாக தான் இருக்கும் என வியாபாரிகள் அஞ்சுகின்றனர். இருப்பினும், சில நிறுவனங்கள் வாட்ஸ் அப் கால் மற்றும் இணையதளத்தின் மூலம் விற்பனையை அதிகரிக்க களமிறங்கியுள்ளன.

புதிய அவதாரம் எடுக்கும் ’ஆடி தள்ளுபடி’ விற்பனை
கோப்புப் படம்
  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி தள்ளுபடி விற்பனை என்பது சாமானிய மக்களிடையே தனி கவனத்தை ஈர்க்கும் விஷயம்.. ஆண்டு தோறும் ஆடி மாதத்தின் போது தியாகராயநகர் விழா கோலம் பூணும். ஆனால் கொரோனா அச்சுறுத்தலால் தற்போது மிக அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர்.

மே மாதத்தில் பள்ளி சீருடை, அதன் பின் ஆடி தள்ளுபடி விற்பனை என மீண்டும் விற்பனை சூடுபிடிக்க வேண்டிய நிலையில் கொரோனா ஊரடங்கு வியாபாரிகளை முடக்கி போட்டுவிட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் தொடங்கி இன்று வரை ஐவுளி வியாபாரிகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர்.

ஊரடங்கு கெடுபிடிகள் இருப்பதால், ஆடி விற்பனை இந்த ஆண்டு மிக மோசமாக இருக்கும் என வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.


கடைகளுக்கு வர வேண்டிய சரக்கு ஊரடங்கால் பாதி வழியில் இருப்பதாக கூறும் கடை உரிமையாளர்கள், அதற்காக ஆடியில் நடைபெறும் விற்பனையில் சமரசம் செய்ய தயாராக இல்லை.. இதற்கு தற்போது அவர்கள் இணைய வழியை கையாள தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டு ஆடி விற்பனை , பெரும்பாலும் வாட்ஸ் அப் வீடியோ காலில் தான் நடைபெறும் என்று வியாபாரி அப்துல் கலாம்  கூறுகின்றார். வாடிக்கையாளர்களுக்கு ஒரு எண் வழங்கப்படும், அந்த எண்ணிற்கு அழைத்தால், அந்த கடையில் இருக்கும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு தேவையான உடைகளை வாட்ஸ் அப் காலிலேயே காண்பித்து விற்பனை செய்கின்றனர்.

வாட்ஸ் அப் காலில் ஒரு உடையை தேர்வு செய்த பின்னர், அப்படியே ஆன்லைனில் பணத்தை செலுத்த முடியும் என்கிறார்.மேலும், அட்சய திருதியையின் போதும் இதே போல் தான் வாட்ஸ் அப்பில் ஆடர்கள் எடுக்கப்பட்டன. தற்போது ஒரு சில கடைகள் ஆன்லைன் நிறுவனங்கள் செய்வது போல், CASH ON DELIVERY வாய்ப்பையும் வழங்குகின்றனர்.

மேலும் படிக்க...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம்கட்ட ஆன்லைன் சிஏ வகுப்புகள் எப்போது தொடங்கும்?

நாளைமுதல் தமிழக கல்வித்துறையில் செயல்பட இருக்கும் 3  திட்டங்கள் எவை? முழு விவரம் இதோ...

சில நிறுவனங்கள் புதிய துணி வகைகளை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று காண்பித்து விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளன.

கொரோனாவால் இந்த ஆடி மாதம், கண்டிப்பாக கடந்த ஆண்டுகளை போல இருக்காது என்று கூறும் வியாபாரிகள்.. இணைய யுக்திகள் மூலம் குறைந்தபட்ச விற்பனையையாவது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்று வியாபாரி மகேஷ்வரி கூறுகிறார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading