முககவசம் அணிய பயிற்சியளிக்கும் பெண் போலீஸ்... வைரல் வீடியோ...!

முககவசம் கொடுத்து அணியும் முறை குறித்து காவல் துறை பெண் அதிகாரி விளக்கும் காட்சி

  • Share this:
முதியவருக்கு முககவசம் கொடுத்து அணியும் முறை குறித்து காவல் துறை பெண் அதிகாரி விளக்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள புதுச்சேரியில் காவல் துறையினர் பல்வேறு விதங்களில் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.அந்த வகையில் போக்குவரத்து காவல்  கண்காணிப்பாளர் ரட்சனா சிங் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாலையோரத்தில் நடந்து சென்ற ஒரு முதியவர் முக கவசம்  அணியாமல் சென்றார்.

அவரை அழைத்து முக கவசம் கொடுத்து கண்காணிப்பாளர் அதனை எப்படி அணிவது என பயிற்சியும் அளித்தார்.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உட்பட பலரும் இந்தபெண் காவல் அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.Also see...

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: