சென்னையில் காய்ச்சல் முகாம் மூலம் தற்போது 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது

சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மூலம் தற்போது வரை 10,463 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் காய்ச்சல் முகாம் மூலம் தற்போது 10,463 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது
(கோப்புப் படம்)
  • Share this:
சென்னையில் மட்டும் ஜூலை 6ம் தேதி வரை 70,017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 44,882 பேர் குணமடைந்துள்ள நிலையில், 24,052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1082 பேர் உயிழைந்துள்ளனர். சென்னையில், மே மாதம் முதல் வேகமாக அதிகரிக்கத்த தொடங்கி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதனொரு பகுதியாக சென்னையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சோதனையை அதிரிக்க திட்டமிடப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து நேரடியாக பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.


சராசரியாக தினமும் 500க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த மே 8 முதல் ஜூலை 6ம் தேதி வரை 13,212 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 8.5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ள 40,175 பேர் கண்டறியப்பட்டனர்.

இவர்களில், அதிக அறிகுறி உள்ள 35,937 பேருக்கு  கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ராயபுரம், தண்டையாபேட்டை உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் கொரோனா அறிகுறியுடன் பலர் கண்டறியப்பட்டு, அதிக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 10,463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரமாக அதிக தொற்று கண்டறியப்பட்டும் அண்ணா நகர் மண்டலத்தில் 3,812 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில், 2175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச பரிசோதனை தண்டையார்பேட்டை மண்டலத்தில் செய்யப்பட்டுள்ளது.இங்கு, சோதனை செய்யப்பட்ட 7,658 பேரில் 1164 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை அதிகம் உள்ள ராயபுரம் மண்டலத்தில் 6051 பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டதில் 826 பேருக்கும் மட்டுமே தொற்று இருந்துள்ளது.

மணலியில் 808 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் 422 பேருக்கும், பெருங்குடியில் 1315 பேருக்கு பரிசோதை செய்யப்பட்டத்தில் 664 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மக்களிடம் வசிப்பிடங்களுக்கு நேரடியாக சென்று காய்ச்சல் முகாம் மூலம் சோதனை செய்வதன் லேசான அறிகுறி உள்ள போதே 10,463 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Also read... திருப்பதி மலையில் தீயாய் பரவும் கொரோனா - ஊழியர்கள் 60 பேருக்கு தொற்று உறுதி

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், லேசான அறிகுறி இருந்தே போத தொற்று கண்டறியப்பட்டதால், இவர்களிடம் இருந்து நோய் பரவுவது தடுக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் காய்ச்சல் முகாம்களில் அறிகுறி இருந்தால் உடனடியாக வந்து பரிசோதித்து கொள்ளலா.

இந்த முகாம்களின் எண்ணிக்கையும், பரிசோதனை எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading