Home /News /coronavirus-latest-news /

வாய்பேச முடியாதோருக்கு பிரத்யேக முகக்கவசம் - திருச்சியை சேர்ந்த மருத்துவர் ஹக்கீமின் புதிய முயற்சி

வாய்பேச முடியாதோருக்கு பிரத்யேக முகக்கவசம் - திருச்சியை சேர்ந்த மருத்துவர் ஹக்கீமின் புதிய முயற்சி

முகக்கவசம் செய்வதற்கான அனுமதி கிடைத்தவுடன் பிரத்யேக முறையில் 1,000 முகக்கவசம் தயாரித்து அதனை வாய்பேச முடியாதோர் மற்றும் செவிதிறனற்றோருக்கு இலவசமாக கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

    வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோர் தங்கள் உணர்வை வாய் சைகை மூலம் பிறருக்கு தெரியப்படுத்தும் வகையில் அவர்களுக்காக பிரத்யேக முகக்கவசத்தை வடிவமைக்கும் முயற்சியில் இளம் மருத்துவர் ஒருவர் இறங்கியுள்ளார். 

    திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை சேர்ந்தவர் மருத்துவர் ஹக்கீம். எம்.பி.பி.எஸ். முடித்துள்ள இவர் தற்போது திருச்சியில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வாய்பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோருக்காக மனிதநேய அடிப்படையில் பிரத்யேக முகக்கவசத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணிந்துகொண்டால் சைகை மூலம் அவர்கள் கூற வருவதை பிறரால் எளிதாக புரிந்துகொள்ள முடியாது. இதற்காக இப்போது உள்ள சூழலில் வாய்பேச முடியாதோர் முகக்கவசம் அணியாமலும் இருக்க முடியாது. கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் முககவசம் அணிவது அவசியம் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் இதனைக் கருத்தில்கொண்ட மருத்துவர் ஹக்கீம், என்.95 மாஸ்கில் உள்ள சில பகுதியை நீக்கிவிட்டு அதற்கு பதில் eco friendly transparent காகிதத்தை இணைத்துள்ளார். இதன் மூலம் வாய்பேச முடியாதோரின் சைகைகளையும், வாய் அசைவுகள் மூலம் எளிய முறையில் பிறர் புரிந்துகொள்ள முடியும்.

    இது தொடர்பாக நம்மிடம் பேசிய மருத்துவர் ஹக்கீம், eco friendly transparent  காகிதத்தை பொறுத்தவரை மூச்சுவிடுவதற்கு எந்த சிரமும் இருக்காது என்றும், மற்ற ஜரிகைகள், பிளாஸ்டிக் பைகளை போன்று transparent eco friendly காகிதத்தில் fog படியாது எனவும் தெரிவித்தார்.

    முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில் இந்த முயற்சியில் தாம் இறங்கியுள்ளதாகவும், இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பிரத்யேக முறையில் 1,000 முகக்கவசம் தயாரித்து அதனை வாய்பேச முடியாதோர் மற்றும் செவித்திறனற்றோருக்கு இலவசமாக கொடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

    Also see...

    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Doctor, Make Your Own Mask

    அடுத்த செய்தி