கொரோனா விழிப்புணர்வு: 200 மில்லி கிராம் தங்கத்தில் 6 முகக்கவசங்களை வடிவமைத்த நகைப் பட்டறைத் தொழிலாளி
முகக்கவசம் உயிர் கவசம் என்ற விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் நோக்கில் 200 மில்லி கிராம் தங்கத்தில் 6 முகக்கவசங்களை வடிவமைத்துள்ளார் தங்க நகை பட்டறை தொழிலாளி ஒருவர்.

தங்க முகக்கவசங்களை வடிவமைத்த தங்க நகை பட்டறைத் தொழிலாளி.
- News18 Tamil
- Last Updated: July 13, 2020, 3:34 PM IST
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்க நகை பட்டறைத் தொழிலாளி யு.எம்.டி ராஜா. இவர் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம்.
தங்கத்தில் கிரிக்கெட் பேட், உலகக் கோப்பை, பல்வேறு அரசியல் தலைவர்களின் சிற்பம் என பல்வேறு சிற்பங்கள் வடிவமைத்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, 200 மி.கிராம் தங்கத்தில் ஆறு கவசங்களை உருவாக்கி உள்ளார்.
Also see:
100, 40, 30, 20, 10 என மொத்தம் 200 மி.கிராம் தங்கத்தில் இதனை வடிவமைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இதனைச் செய்ய இரண்டு நாட்கள் ஆனதாகவும், 10 மி.கிராம் முகக்கவசம் மிக மெல்லியது எனவும் தெரிவித்தார். சிறிய அளவிலான சிற்பம் எனினும் பெரிய அளவில் இது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவதாகத் தெரிவித்த அவர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.