வலியில் துடித்த வடமாநில கர்ப்பிணி பெண்: சாலையோரத்தில் பிரசவம் பார்த்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன்..!

எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் எழுதிய" லாக்கப்" நாவலை , விசாரணை என்ற பெயரில் திரைபடமாக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

வலியில் துடித்த வடமாநில கர்ப்பிணி பெண்: சாலையோரத்தில் பிரசவம் பார்த்த எழுத்தாளர் ஆட்டோ சந்திரன்..!
கோப்புப் படம்
  • Share this:
கோவையில் பிரசவ வலியால் துடித்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவருக்கு  சாலை ஓரத்தில் வைத்து எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் பிரசவம் பார்த்துள்ளார்.  

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள துளசி லே அவுட்  பகுதியில்  ஏராளமான ஒடிசா  மாநிலத்தவர் வசித்து வருகின்றனர். ரயில்வே கேட் அருகே கூடாரம் அமைத்து வசித்து வரும் இவர்கள் இங்கு கிடைக்கும் பணிகளை செய்து வருகின்றனர். இங்கு இருக்கும் 26 வயது பெண்ணிற்கு வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பெண்ணை வடமாநில இளைஞர்கள்  தூக்கி வரும்போது அந்த பெண்ணிற்கு பிரசவ வலி அதிகரித்து துடித்துள்ளார். அங்கு உள்ள இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பாக அந்த பெண்ணை உட்கார வைத்துவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியுடன்  ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்.


மேலும்  இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் எழுத்தாளர் ஆட்டோ சந்திரனுக்கும்  தகவல்  சொல்லப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தனது ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டநிலையில் வடமாநில  பெண்ணுக்கு  சாலை ஒரத்திலேயே பிரசவம்  ஆனது.

அந்த பகுதியில் இருந்த பெண்கள் கொரோனா அச்சம் காரணமாக வடமாநில பெண்ணின் பக்கத்தில் வரவே இல்லை. இந்நிலையில், எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். சுகப்பிரசவமாக ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தையை கையில் தாங்கி பிடித்தபடி ஆட்டோ சந்திரன் இருந்தார்.

அப்போது 108  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். ஆட்டோ சந்திரன்  உதவியுடன் தொப்புள் கொடியை அகற்றிய 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர்கள் தாய், சேய்  இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.இந்த காட்சிகளை சம்பவ இடத்தில் இருந்த நபர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில்  பதிவிட்ட  நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி  வருகின்றது. எழுத்தாளர் ஆட்டோ சந்திரன் எழுதிய" லாக்கப்" நாவலை , விசாரணை என்ற பெயரில் திரைப்படமாக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: April 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading