இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகையே முடக்கிப் போட்ட கொரோனா வைரஸால் உலக அளவில் 8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில், முந்தைய வைரஸ் வகையைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை வேகமாக பரவும் தன்மை கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவதாக வந்த புதிய செய்தி பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில், தென் ஆஃப்ரிக்காவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ், பிரிட்டனில் பரவிவரும் வைரஸை காட்டிலும் அதிக ஆபத்தானது என பிரிட்டன் கூறியிருப்பதை, தென் ஆஃப்ரிக்கா மறுத்துள்ளது. இங்கிலாந்தில் தென் ஆஃப்ரிக்க பயணிகளுக்குத் தடை விதிப்பதாக அறிவித்த பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் மேட் ஹான்காக், அங்கு கண்டறியப்பட்டுள்ள பதிய வகை வைரஸுக்கு பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸை விட தொற்றும் தன்மை அதிகம் என்று தெரிவித்திருந்தார்.
Also read: கும்பகோணத்தில் திருடியதை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பி இருவரும் வெட்டிக் கொலை - கொலையாளிகள் தலைமறைவு
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தென் ஆஃப்ரிக்க சுகாதார அமைச்சர் ஸுவெலினி மெக்கிஸ், இங்கு கண்டறியப்பட்டுள்ள 501.V2 வகை வைரஸால் பாதிக்கப்படுவோருக்கு நோய் கடுமையாகும் என்பதற்கோ, அவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் என்பதற்கோ, எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்