• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா:

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா:

பொதுக் கணக்குக் குழு பிரிவில் தொற்று ஏற்பட்ட ஊழியருடன் பணியாற்றிய ஊழியர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

  • Share this:
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் பணியாற்றிய அறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் பொதுக் கணக்குக் குழு என ஒரு பிரிவு உள்ளது. அதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று வரை அவர் பணிக்கு வந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. இதனால் அவர் பணியாற்றிய அறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு இழுத்து மூடப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்த நிலையில், கடந்த 18ம் தேதி முதல் இரு குழுக்களாகப் பிரிந்து 50% ஊழியர்களுடன் தலைமைச் செயலக அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுக் கணக்குக் குழு பிரிவில் தொற்று ஏற்பட்ட ஊழியருடன் பணியாற்றிய ஊழியர்கள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: