கோவை: இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பார்த்து கொள்ள கட்டணம் வசூலித்தவர் கைது...

கோப்புப் படம்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில்  கொரொனா தொற்றால்  பாதிக்கப்பட்ட நோயாளிகளை பார்த்து கொள்ள கட்டண உதவியாளராக செயல்பட்ட ஒருவரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share this:
கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 680 படுக்கைகள் உள்ளன. இவற்றில் தற்போது 588 படுக்கைகளில் கொரொனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்களை பார்த்து கொள்ள ஒரு உதவியாளரை மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்துள்ளது.

ஆனால் கொரொனா தொற்று என்பதால் அருகில் செல்ல தயங்கும் நிலையில் , இதை பயன்படுத்தி கட்டண உதவியாளர்கள் என்ற பெயரில் ஏராளமான நபர்கள் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் வலம் வர துவங்கினர். இது தொடர்பாக புகார்கள் கிடைத்த நிலையில்  மருத்துவமனை வளாகத்தில் சட்ட விரோதமாக கட்டண உதவியாளர்கள் செயல்படுவதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் இ.எஸ்.ஐ நிர்வாகம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் இருந்த 17 பேரை வெளியேற்றினர். மேலும் பாலாஜி என்ற கட்டண உதவியாளரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரொனா தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்ள நாள் ஒன்றுக்கு  2500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை கட்டணம் பெற்றுக்கொண்டு இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் கட்டண உதவியாளர்கள் செயல்பட்டு வந்து இருப்பதும் இவர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை ஊழியர்கள் சிலர் உடந்தையாக இருப்பதும் தெரியவந்தது.

மேலும் படிக்க... செங்கல் சூளையில் கூலித் தொழிலாளி மர்ம மரணம்.. 3 பேர் கைது .. தொடரும் உறவினர்களின் போராட்டம்

மேலும் பாலாஜி என்பவரை கைது செய்துள்ள சிங்காநல்லூர் போலீசார் கட்டண உதவியாளர்களை நியமித்து அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: